Headlines News :
Home » » விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வேகத்தினை அதிகரிக்க உதவும் மென்பொருள்

விண்டோஸ் 8 இயங்குதளத்தின் வேகத்தினை அதிகரிக்க உதவும் மென்பொருள்

Written By Unknown on Thursday, January 3, 2013 | 7:49 AM

கணினியின் நினைவகங்களில் தேங்கும் தற்காலிக கோப்புக்களை நீக்கி அதன் வேகத்தினை அதிகரிக்க செய்வதற்காக பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.

இவற்றின் வரிசையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை கொண்டு இயங்கும் கணினிகளில் வேகத்தினை அதிகரிப்பதற்கென விசேடமாக தயாரிக்கப்பட்ட மென்பொருளே Windows Tuner ஆகும்.

முற்றிலும் இலவசமாக கிடைக்கும் இம்மென்பொருளின் உதவியுடன் RAM Memory, System Registry ஆகியவற்றிலுள்ள தற்காலிக கோப்புக்களை நீக்குவதுடன் இயங்குதளத்தின் Startup மற்றும் Booting வேகத்தினை அதிகரிக்க செய்கின்றது.

இவற்றுடன் கணினியில் காணப்படக்கூடிய தவறுகளை இனம்கண்டு அவற்றினை நீக்குவதற்குதல், வன்றட்டினை மேம்படுத்தி விரைவான தரவு அணுகலை உருவாக்குதல் போன்றவற்றிற்கும் இம்மென்பொருள் பயன்படுகின்றது.

மேலும் Windows 8, தவிர்ந்த Windows 7, Vista, XP போன்ற இயங்குதளங்கிலும் Windows Tuner செயற்படக்கூடியதாக காணப்படுகின்றது.
Share this article :
 
Support : Copyright © 2013. Parathan - All Rights Reserved