Headlines News :
Home » » ஜிம் உடற்பயிற்சிகள்

ஜிம் உடற்பயிற்சிகள்

Written By Unknown on Saturday, January 5, 2013 | 7:19 AM

‘ஜிம்’ என்கிற உடற்பயிற்சிக் கூடத்தில் என்னென்ன உபகரணங்கள் இருக்கின்றன? உடலின் எந்தப் பகுதியைக் குறைக்க வேண்டும் அல்லது கூட்ட வேண்டும்? அதற்கு எந்த மெஷின் பொருத்தமாக இருக்கும்? என்பதை இப்போது பார்க்கலாம்..... ஜிம் உள்ள இந்த உபகரணங்களை கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் எந்த வகையில் உடல் எடை குறைப்பதில் பயன்படுகிறது என்பதை பார்க்கலாம். 

• வயிற்றுச்சதை குறைய ஆப் க்ரன்ச் 
அடி வயிற்றில் இருக்கும் சதையைக் குறைத்து, உங்களை ஸ்லிம்மாக காட்டும் இயந்திரம் இது! இரண்டு பக்கமும் இருக்கும் ஹேண்டில் பாரை கையில் இழுத்து முன்பக்கமாக குனிந்து நிமிர வேண்டும். பக்கத்தில் இருக்கும் போர்டில் 1ல் இருந்து 12 வரை எண்கள் இருக்கும். 1 ஈஸி. 12 ரொம்பக் கஷ்டம். அவரவர் உடல்வாகுக்கு ஏற்ப எண்களை வைத்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 5தான் நார்மல். இப்படி தொடர்ந்து தினமும் 20 நிமிடங்கள் வரை செய்தால் இலியானா இடையழகைப் பெறலாம். 

• கலோரிகளைக் குறைக்க ட்ரெட்மில் 
ஒரே இடத்தில் இருந்தபடி நடக்க, ஓட உதவும் இயந்திரம் இது. இதன் உதவியால் உடலில் இருக்கும் தேவையற்ற கலோரிகளை குறைக்கலாம். நடக்கும் வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் இதில் வசதி இருக்கிறது. ஜிம் செல்ல முடியாதவர்கள் தங்கள் வீடுகளிலேயே இதை வைத்துக் கொள்ளலாம். இதை எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்து பயிற்சி செய்வது நல்லது. 15 நிமிடங்களுக்கு மேல் இப்பயிற்சி செய்வது நல்லதல்ல. மூட்டுவலி வரும் அபாயம் உண்டு. 

• எக்ஸ்ட்ரா சதை குறைய பைக் ரீகம்பென்ட் 
பைக் ஓட்டுவது மாதிரியான பயிற்சி, பெடல் போடுவது போல கால்களை சுழற்ற வேண்டும். அடிவயிறு, தொடைப்பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரா சதை குறையும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சரியான சாய்ஸ். தினமும் 20 நிமிடங்கள் செய்தால் எடை குறையும். ஃப்ரெஷ்னெஸ் கிடைக்கும்.
Share this article :
 
Support : Copyright © 2013. Parathan - All Rights Reserved