தேடலில் ஆர்வம் கொண்டவர்களுக்கும், மாணவர்களுக்கும் விக்கிபீடியா தளமானது ஒரு பொக்கிஷமாகவே திகழ்கின்றது.இதற்கு ஒவ்வொரு துறை சார்ந்தும் அத்தளத்தில் உள்ள லட்சக்கணக்கான கட்டுரைகளும் அவற்றினை இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக காணப்படுதலுமே ஆகும்.
இவ்வாறு குறித்த ஒரு தலைப்பு தொடர்பாக காணப்படும் கட்டுரைகளை தேடி தொகுத்து தருவதற்கு Wikipedia Bio References எனும் மென்பொருள் பெரிதும் உதவிகரமானதாக காணப்படுகின்றது.
இது தவிர விக்கிபீடியா தளம் அல்லாத ஏனைய தளங்களில் காணப்படும் குறித்த விடயம் தொடர்பான தகவல்களையும் தேடித்தரும் வசதியும் இம்மென்பொருளில் காணப்படுகின்றது.
700 KB கோப்பு அளவு கொண்ட Wikipedia Bio References ஆனது விண்டோஸ் மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு காணப்படுகின்றது.
தரவிறக்கச் சுட்டி